1993ஆம் ஆண்டு வைகோ அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தபோது இரண்டு இளைஞர்கள் தீக்குளித்து உயிரிழந்தது, அதேபோல் ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் போது பேருந்து கொளுத்தப்பட்டு கோகிலவாணி உள்ளிட்ட சிலர் உயிரிழந்தது போன்ற சம்பவங்கள் தமிழக அரசியல் வரலாற்றில் இன்னும் நினைவில் நிற்கின்றன.
இதேபோன்ற துயரமான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவே தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை கைது செய்யாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டுள்ளார் என சிலர் பாராட்டுகின்றனர். தற்போது கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் எந்தவித கலவரமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அரசு அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் உணர்ச்சியுடன் பேசும் விதமாக, “விஜய் இன்னும் கரூருக்குச் செல்லவில்லை என்பதை நினைத்தாலே கண்களில் நீர் வருகிறது; ஆனால் அவர் மக்கள் உயிரைக் கருத்தில் கொண்டு செல்லவில்லை. தன்னை பாதுகாக்க 10 முதல் 20 பவுன்சர்கள் வைத்துக்கொள்கிறார் என்றால், மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு அவருக்கும் உண்டு.
பெரிதும் பேசப்படாத ஒரு கோணம்.
ஒரு தலைவர் கைதாகிறார், கட்சி உடைகிறது போன்ற நேரங்களில் உணர்ச்சிவயப்பட்டு தற்*லையோ, அல்லது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி உயிரிழப்புகளோ நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் முதல்வரும் மிக தெளிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
விஜய் பெயரை FIR இல் சேர்த்து… https://t.co/RSImilpWpp
— முனைவர். கணேசு ガネス (@DrGanesh_Japan) October 14, 2025
“>
மக்கள் முட்டாள்கள் அல்ல; இதற்குப் பிறகு விஜயின் அரசியல் பயணம் பூஜ்ஜியம் தான்” எனக் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே “விஜயின் அரசியல் முடிவுகள் சரியானவையா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
