தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அனைத்து கட்சிகளும் இரங்கல் தெரிவிக்க, சட்டமன்ற உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மக்களை இழந்த வலியிலும், அரசை நோக்கிய கேள்விகளிலும் ஆழ்ந்திருந்த போதும், பெரும்பாலான உறுப்பினர்கள் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆனால், இந்த இரங்கல் தீர்மானத்தின் போது கரூர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி அவையில் இல்லை என்பது கவனத்தை ஈர்த்தது. இதனை அதிமுகவின் ஐடி பிரிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனத்துடன் பதிவு செய்துள்ளது. அதில், “கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆன செந்தில்பாலாஜி எதற்காக அவையில் இல்லை? குற்ற உணர்ச்சியோ அல்லது மனசாட்சி உறுத்தியதோ?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்று சட்டப்பேரவையில் #KarurTragedy-யில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மக்களை இழந்த வலிகளையும், அரசை நோக்கிய கேள்விகளையும் சுமந்துக்கொண்டிருந்த போதும், 41 உயிர்களுக்கு மதிப்பளித்து, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மவுன அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.… pic.twitter.com/PXqFvQQVES
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) October 14, 2025
“>
மேலும், கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் உட்பட சிலரும் இந்நிகழ்வில் பங்கேற்காதது குறித்தும் குறிப்பிட்டுள்ள அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
