சமூக வலைதளங்களில் தற்போது ஒரு திருமண வீடியோ காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வங்காளத் திருமண மண்டபத்தில், அக்னி குண்டத்திற்கு முன்னால் ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருக்க, புதுமணத் தம்பதி ஒருவர் சுமார் 35 நொடி நீளமுள்ள வீடியோவில் 32 நொடிகள் இடைவிடாமல் முத்தமிட்டுக் கொள்கின்றனர். திருமண உடையில் இருக்கும் அந்தத் தம்பதியின் இந்தச் செயல், அங்கிருந்த வீடியோகிராபரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் திருமணங்களில் மோதிரம் மாற்றுவது அல்லது தாலி கட்டுவது போன்ற காட்சிகள் வைரலாகும் நிலையில், இந்தத் தம்பதியின் அதீத நெருக்கம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Kissing at the mandap in front of Agni Dev?
Absolutely shameful. A Hindu wedding is a sacred ritual, not a Hollywood set. Stop contaminating our sanskriti with this Western copycat nonsense. If you can’t respect the sanctity of Hindu vivah, you don’t deserve it. pic.twitter.com/GVEkoFZPcZ
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) March 13, 2026
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இது என்ன கல்யாணமா இல்ல வெப் சீரிஸ் ஷூட்டிங்கா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். “மேற்கத்திய கலாச்சாரத்தில் கூட இவ்வளவு நீண்ட முத்தங்கள் பொதுவெளியில் கிடையாது, இது பார்க்கவே அநாகரீகமாக இருக்கிறது” என ஒரு தரப்பினர் விளாச, மற்றொரு தரப்பினரோ, “காமசூத்திரம் தோன்றிய மண்ணில், தம்பதிகள் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு?” என ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். எரியும் நெருப்பிற்கு முன்னால், எதையும் சட்டை செய்யாமல் இந்தத் தம்பதி செய்த செயல், தற்போது சோசியல் மீடியாவில் ‘Lust or Love’ என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
