கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து கீழநத்தம் வழியாக தினமும் காலை 7.30 மணிக்கு சேத்தியாதோப்புக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் கீழநத்தம், மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், படப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேத்தியாதோப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று படித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சென்று அரசு பேருந்தை சிறப்பிடித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.