உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு அதிகாரிகள் எச்சரித்தும் மீறித் தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து பெண் காவலர் ஹமீர்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், அங்கேயும் இருவரும் சேர்ந்து வசித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த காவலரின் மனைவி, தனது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையுடன் நேரில் சென்று பார்த்தபோது, இருவரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவத்தைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி, அங்கேயே கணவரைத் தாக்கியதால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் காவல் துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

“>

 

காவலரின் மனைவி தனது கணவர் மற்றும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாலும், இதுவரை அவர் தரப்பில் எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினருக்குள்ளேயே நடந்த இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.