அகோலாவில் பிரபல நிறுவனம் ஒன்றின் சாக்லேட்டைத் தனது குழந்தைக்கு வாங்கி வந்த தந்தை ஒருவர், அதைப் பிரித்தபோது அதிர்ச்சியடைந்தார். சாக்லேட்டுக்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு பதறிய அவர், உடனடியாக அந்தத் துயரச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சாக்லேட்டின் தரம், காலாவதி தேதி மற்றும் பேக்கேஜிங் முறை குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தந்தை வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து அந்தப் பெற்றோர் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் முறையான புகாரைப் பதிவு செய்துள்ளனர். மேலும், நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
சாக்லேட் தயாரிப்பிலோ அல்லது அதன் சேமிப்பு முறையிலோ ஏதேனும் தவறு நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் உடல்நலனைப் பாதிக்கும் இதுபோன்ற தீவிரமான விஷயத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
