செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாகிஸ்தான் மட்டும்  ஆஸ்திரேலியா,  ஆப்பிரிக்கா அந்த பகுதியில் இருந்துச்சுன்னா….  இவனுக்கு எதாவது அரசியல் இருக்கா ? ஏதாவது இருக்கா ? ஏதாவது ஒரு கோட்பாடு இருக்கா ? சொல்லுங்க,  ஒண்ணுமே கிடையாது….. பாகிஸ்தான்….. பாகிஸ்தான்….. பாகிஸ்தான்…..

அருணாச்சல பிரதேசம் என்னது என்கிறான் சீனா….  நீங்க தான் பெரிய  சிங்கங்கள்…..  பெரிய கிங்காங் ஆச்சே…..  ஒரு தடவை அவங்க கிட்ட பேசுங்களேன்…. கால் வச்ச தொலைச்சி புடுவேன்… என்னதுடா என சொல்லி பாரு... இந்த  தலைவர்கள் கிட்ட நான் பகிரங்கமா சவால் விடுகிறேன்…. அருணாச்சலப் பிரதேசத்தின் நடு இடம் இருக்குல்ல,  மையம் இருக்குல்ல….

அங்க நின்னு ஒரு கூட்டம் பேசிட்டு திரும்பிடுங்க பாக்கலாம்…. சத்தியமா சொல்றேன்….  போய் பேசிட்டு வாங்க….  சரி அருணாச்சல பிரதேசம் என்னது…. அந்த வாழ்கின்ற மக்களுக்கு பாஸ்போர்ட்,  விசா தேவை இல்லை என்று சீனா அறிவிக்கிதுல்ல, அதுக்கு   உன்னுடைய கருத்து என்ன ?

இந்த நாட்டு தலைவருடைய கருத்து என்ன ?  அசாத் காஷ்மீரை மீட்போம்….  மீட்பீங்க…  அப்பொழுது சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீரை அப்படியே பேசுவோம்,  மீட்போம் ஒரு தடவை பேசுப்பா… இதை பேசுற மாதிரி அதையும் ஒரு தடவ சவுண்ட் விடு பார்ப்போம்…. அது எப்படி ? என விமர்சனம் செய்தார்.