சென்னை பெரியார் திடலில் நடந்த திமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்ஜிஆர் படத்துக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை போட்டு போஸ்டர் அடிக்கும் நிலையில்தான் இன்றைய அதிமுக உள்ளது. ஆளும் கட்சியாக பொறுப்புக்கு வந்த பிறகு சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் இது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். எனவே 40 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி கூறியுள்ளார்.