நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க), அதிமுக-வின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் ஜூன் 22-ஆம் தேதி கூண்டோடு இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய மெகா வதந்திக்கு, தற்பொழுது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரடியாக முற்றுப்புள்ளி வைத்து அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.
சோசியல் மீடியா ஏரியாக்களில் இந்தத் தகவல் பயங்கர சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தாம் எப்போதும் அதிமுக-வின் விசுவாசமான தொண்டனாகவே இருப்பதாகவும், த.வெ.க-வில் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அப்பட்டமான வதந்திகள்” என்றும் திட்டவட்டமாகக் கூறி இந்த அரசியல் பரபரப்புக்கு ஒற்றை வரியில் என்ட் கார்டு வைத்துள்ளார்.
மேலும், அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே சிலர் திட்டமிட்டு பரப்பி வரும் இந்த போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தாங்கள் எப்போதும் போல அதிமுக-விலேயே தொடர்ந்து நீடிப்போம் என்றும் அவர் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். எவ்வித உண்மையும் இல்லாமல் திடீரென கிளம்பிய இந்த த.வெ.க இணைப்பு விவகாரம், முன்னாள் அமைச்சரின் இந்த நச்சுனு விளக்கத்திற்குப் பிறகு தற்பொழுது சோசியல் மீடியாக்களில் செம ட்ரெண்டாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
