மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஆசிரமத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்து, தனது சிறுநீரைக் குடிக்க வைத்ததோடு, தொடர்ந்து அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அந்த போலி சாமியாரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாமியாரின் ஆசிரமத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு அளவிலான தற்காப்பு உறை மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத நம்பிக்கையைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி, ஆசிரமத்தில் இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வந்த அந்த சாமியார் மீது பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.