மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த அவந்திகா மௌரியா என்ற இளம் பெண், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்தூரில் உள்ள ‘தாகத் காலனி’ பகுதியில் தனது அக்காவுடன் தங்கிப் படித்து வந்துள்ளார். அவந்திகா ஏற்கனவே மூன்று முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில் பேசிக்கொண்டே மாடிக்குச் சென்றவர், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.

அதிகாலை 5 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் அவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை ஃபார்மசி கல்லூரியில் சேர்த்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்பது குறித்து, அவரது மொபைல் போன் விவரங்களை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.