சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாபூர் நகரில், ஒரு பதற்றத்தைக் கிளப்பும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில், பழைய பெட்ரோல் பங்க் அருகே, ஒரே ஸ்கூட்டரில் 5 இளைஞர்கள் பயணிக்கின்ற காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், நான்கு பேர் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்ததோடு, ஐந்தாவது இளைஞரை அவர்கள் தோள்களில் தூக்கி வைத்திருந்தனர்.
शहर के नेशनल हाईवे पर पुराने पेट्रोल पंप के पास वायरल वीडियो में पांच युवक स्कूटी पर क्षमता से अधिक सवार होकर तेज रफ्तार में स्टंट करते दिख रहे हैं। यह खतरनाक व्यवहार आम लोगों की जान के लिए जोखिम है आप से अनुरोध है तुरंत जांच और कार्यवाही की जाए। @BijapurPolice @CG_Police pic.twitter.com/5OHIstO6eK
— Ilyas (@Ilyas_SK_31) September 29, 2025
யாரும் ஹெல்மெட் அணியாமல், வேகமாக ஸ்டண்ட் பண்ணும் விதத்தில் சென்றனர். இந்த 18 வினாடிகள் கொண்ட வீடியோவில், இவர்களின் செயல் கடுமையான போக்குவரத்து விதி மீறல் மட்டுமல்லாமல், பொதுமக்கள் உயிருக்கு நேரடியான ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
வீடியோவைக் காட்சிப்படுத்திய நபர், இவர்களின் செயலை நக்கலாக “ரொம்ப நல்லாருக்கு… நம்பர் ஒன்னு!” என சொல்ல, முதலில் முகத்தை மறைத்த இளைஞர்கள், பிறகு திரும்பி “தேங்க்ஸ் அண்ணா!” என பதிலளிக்கும் காட்சியையும் காணலாம். இந்த வீடியோவை டிவிட்டரில் @Ilyas_SK_31 எனும் பயனர் பகிர்ந்து, “இத்தகைய ஆபத்தான செயல்கள் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டு, சத்தீஸ்கர் மற்றும் பீஜாபூர் போலீசாரை டேக் செய்து, உடனடி நடவடிக்கை கோரியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சத்தீஸ்கர் போலீசாரிடமிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை. பொதுமக்கள் போலீசாரிடம் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
