கேரள மாநிலம் இடுக்கி ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ வாயு தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்காக இறங்கிய சுந்தரபாண்டியன் மற்றும் மைக்கேல் ஆகியோரும் சிக்கினர். மேலும் இவர்கள் மூவரும் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
