சமூக வலைதளங்களில் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு கடையில் தொழிலாளராக பணியாற்றும் நபர், துப்பாக்கியை சோதனை செய்யும் போது ஏற்பட்ட கோளாறால் உயிரிழந்த சம்பவம் பலரை பதற வைத்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோவில், அந்த நபர் தனது கடையில் அமர்ந்தபடி ஒரு துப்பாக்கியை எடுத்து அதை சோதனை செய்யும் காட்சிகள் தெளிவாக உள்ளன.

 

துப்பாக்கி இயங்கவில்லையென்று எண்ணி, உள்ளே புல்லெட் இருக்கிறதா என்று பார்க்கும் தருணத்தில், எதிர்பாராத விதமாக துப்பாக்கி பாய்ந்து, நேராக அவரது முகத்தில் தாக்குகிறது. அந்த தாக்கம் காரணமாக அவர் அப்போதே உயிரிழந்தார்.

இந்த சோகமான காட்சி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் எங்கே நிகழ்ந்தது என்பதற்கான தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை என்றாலும், அதிர்ச்சி தரும் இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு, பலரும் “கவனக் குறைவால் உயிரிழப்பு” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.