நவராத்திரி 2025 பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டக் களமாக மாறி உள்ளது. கர்பா நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன. அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் ஒரு இளம் பெண்ணின் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Swipe to laugh (@swipe.to__laugh)

இந்த வைரல் வீடியோவில், ஒரு சமுதாய ஹாலின் அடித்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அழகான விளக்குகள் மற்றும் இருக்கைகளுக்கு நடுவே அந்த பெண் தனக்கென தனி ஸ்டைலில் கர்பா நடனம் ஆடுகின்றார். குறிப்பாக, அவர் செய்த அதிவேகமான சுழற்சி நடனம் பார்ப்பவர்களை மயக்கம் அடையச் செய்யும் வகையில் இருந்தது. குறுகிய இடத்தில், அந்த வேகத்தில் சுழல்கிறார் என்பதே நெட்டிசன்கள் வியக்கும் விஷயமாகும்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கமான @swipe.to__laugh என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. இதுவரை 24,000 முறை பார்வை பெற்றுள்ள இந்த வீடியோ, தொடர்ந்து வைரலாகிக்கொண்டே செல்கிறது. நெட்டிசன்கள் இவரை “டாடியின் ஏஞ்சல்” என நக்கலாக அழைத்து, “ஹெலிகாப்டரின் ரெக்கை இவ்வளவு வேகமா சுழலாது!” என சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.