உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும். அந்த வகையில் கடந்த வருடம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட எழுச்சியினால் 187 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். அதோடு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எம்.வி.எம்.ஹச் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.