கனடா நாட்டில் இணைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதனால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக் டாக் ஆப்பை அதிகாரப்பூர்வமான மின்னணு சாதனங்களில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சி.என்.என் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “டிக் டாக் ஆப்பை அதிகாரப்பூர்வமான மின்னணு சாதனங்களில் இருந்து நீக்குகிறோம்.

மேலும் இது இன்று முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் கருவூல வாரியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “கனடா அரசால் வழங்கப்பட்ட சாதனங்களில் இருந்து டிக் டாக் ஆப்பை பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அரசு சாதனங்களில் தற்போது இருக்கும் பதிவிறக்கங்களும் முற்றிலுமாக அகற்றப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.