உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த வருடம் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை தனக்கு சொந்தம் ஆக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் ட்விட்டரில் பல விதமான மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் முதல் வேலையாக அந்நிறுவனத்தில் உள்ள 4000க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் ட்விட்டரில் எலான் மஸ்க் கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அதிருப்தி அடைந்து தாமாகவே ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் காரணமாக ட்விட்டரின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை 2000 ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 200 ஊழியர்கள் ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் இதுவரையில் அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் இருந்து 10% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ட்விட்டரில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 1800 ஆக உள்ளது.