முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. மார்ஃபிங் செய்யப்பட்டவை. வாக்காளர்கள் மத்தியில் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மார்ஃபிங் செய்து ஆபாச வீடியோ பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.