இளநிலை & முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை நாளைக்குள் (ஏப்.30) சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது. சமர்ப்பிக்காத கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.