செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, உலகளவில் வேலைவாய்ப்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் தொழில்நுட்பத் துறையோடு மட்டுமே சுருங்கியிருந்த AI, தற்போது பேங்கிங், மீடியா, கஸ்டமர் கேர், கல்வி, மருத்துவம் மற்றும் உற்பத்தித் துறை வரை அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த அதிவேக வளர்ச்சியால், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், கால் சென்டர் மற்றும் கஸ்டமர் சப்போர்ட் ஊழியர்கள், ஆரம்பநிலை கன்டென்ட் ரைட்டர்கள் மற்றும் டிசைனர்கள், அக்கவுண்டிங் மற்றும் புக் கீப்பிங் செய்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து செய்யும் நபர்களின் வேலைகளுக்கு அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், AI தொழில்நுட்பத்தால் சில வேலைகள் பறிபோனாலும், AI இன்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட், சைபர் செக்யூரிட்டி நிபுணர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸ்பர்ட் போன்ற புதிய வேலைவாய்ப்புகள் பல மடங்கு பெருகி வருகின்றன. எனவே, இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொள்ளவும், வேலை இழப்பு போன்ற சூழலில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் மக்கள் இப்போதிருந்தே தங்களின் தனிப்பட்ட நிதி நிர்வாகத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக, குறைந்தது 6 முதல் 12 மாத கால செலவுகளுக்கான அவசரக்கால நிதியை த்து வைப்பது, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு திறமைகளை வளர்ப்பது, ஒரே வருமானத்தை நம்பியிருக்காமல் ஃப்ரீலான்சிங், ஆன்லைன் பிசினஸ் மூலம் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்குவது, கடன் சுமைகளைக் குறைப்பது மற்றும் SIP, PPF போன்ற நீண்ட கால திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வது போன்ற நிதி சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
