அமெரிக்காவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரான மேசி கான்சால்வ்ஸ், இந்தியாவில் தான் வசிக்கும் போது ஆச்சரியமடைந்த ஐந்து முக்கிய விஷயங்களை  தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளார். ஒரு அமெரிக்கராக இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட கலாச்சார ஆச்சரியங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை அவர் “முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது” என்று நகைச்சுவையுடன் விவரித்துள்ளார்.

இதில் அவர் முதலில் குறிப்பிட்டது, இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை பிறப்பிற்கு முன்பே சட்டப்பூர்வமாகக் கண்டறிய முடியாது என்ற விதியாகும்; பாலின சமத்துவத்தைப் பாதுகாக்கவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும் இந்தியாவில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Macy Gonsalvez (@macygonsalvez)

அடுத்ததாக, இந்தியாவில் இரவு நேர பார்ட்டிகள் அல்லது நண்பர்களைச் சந்திக்கும் திட்டங்கள் அனைத்தும் இரவு 8:30 அல்லது 9 மணிக்கு மேல் தாமதமாகவே தொடங்குகின்றன என்றும், இரவு 9:30 மணிக்கே தூங்கச் செல்லும் தனக்கு இது பெரிய மாற்றமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே வாட்டர் ஹீட்டர் சுவிட்சைப் போட்டால் மட்டுமே சுடுதண்ணீர் கிடைக்கும் என்ற அன்றாட வீட்டு நடைமுறையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில், இந்தியாவின் ‘க்விக்-காமர்ஸ்’ மற்றும் டெலிவரி சிஸ்டம் வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்ப்பது தனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியதாகப் பாராட்டியுள்ளார். இறுதியாக, அமெரிக்காவை விட இந்தியாவில் மிகவும் குறைந்த செலவில் சமையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்ய வீட்டு வேலை ஆட்களை நியமித்துக் கொள்ள முடிவதும், பலர் தங்களது வீடுகளிலேயே தங்கி வேலை செய்யும் ஆட்களை வைத்துள்ளதும் இங்குள்ள வாழ்க்கையை மிகவும் வசதியானதாக மாற்றுகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.