பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் மே 1ம் தேதி சிலிண்டர் விலை குறையலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 818.50 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1930 ரூபாயாகவும் உள்ளது.