வடகொரிய உணவு நிலைமை மோசம் அடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிங் ஜோ உன் அவச ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயின் வளர்ச்சிக்கு சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவை கண்காணிக்கும் அமெரிக்காவை போன்று 1990களில் பஞ்சத்திற்கு பின் மிக மோசமான உணவு பஞ்சம் வடகொரியாவில் ஏற்பட்டுள்ளதாகவும் மனிதனுக்கு உணவு கிடைப்பது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

வடகொரிய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்கிறது ஐநா விவரம். வடகொரியா சூழல் இப்படி இருக்க, 2025 ஆம் ஆண்டு வரை குறைவாக உணவு சாப்பிடுங்கள் என அதிபர் அண்மையில் கூறியுள்ளார். பசி, பட்டினியால் மக்கள் வாடினாலும் ஏவுகணை சோதனைகளை கைவிடாமல் வடகொரியா மேற்கொள்வது உலக நாடுகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. மக்களை வதைக்கும் இந்த உணவு பஞ்சத்தை வடகொரியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக தான் உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று ஒரு நாட்டின் ஆட்சியாளர் சொல்வது மிகமிக தவறு என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.