உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய சில நாட்களை அடுத்து ரஷ்யாவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். இதை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஆண்கள் கட்டாயமாக போருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் ரஷ்யாவில் இருந்து கசக்கத்தான், இஸ்ரேல், துருக்கி, அர்மேனியா, அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு மக்கள் செல்ல தொடங்கினர்.

ஒரு பக்கம் குடும்பம் குடும்பமாக ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில் மறுபுறம் போருக்கு சென்று உயிரிழந்த ஆண்களின் எண்ணிக்கை ரஷ்யாவின் அறிவிப்புப்படி 10 ஆயிரத்திற்கும் குறைவே என்று கூறினாலும் உக்ரைனின் அறிவிப்பு படி உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் என்று கூறப்படுகிறது.

மேலும் ரஷ்யாவின் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரஷ்யாவின் மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை மட்டும் பெரிதாக சரிந்து வருவதால் இந்த ஆண்டு ரஷ்யாவின் பிறப்பு விகிதம் பெரும் சரிவை சந்திக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.