ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லமங்கலம் குசலம்பாறை பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சங்ககிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பா உயிரிழந்தார். சின்னசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.