கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் விராலியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்ற முதியவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே காலை கடன் கழிப்பதற்காக சென்றார். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை முதியவரை தூக்கி வீசியது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.