சென்னையில் வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் அமைப்புகள், பெண்ணியவாதிகள், பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனை உள்ள பெண்கள் எல்லாரும் கஞ்சா அடித்து விட்டு, மது குடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்று தமிழகத்தில் உள்ள பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி, அவதூறாக பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையினரிடம் புகார் அளித்தபோது அவர்கள் வழக்குப்பதிவு மட்டும் தான் செய்கிறார்கள்.

அது தவிர அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தான் அவர் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பெண்களை குறித்து அவதூறாக பேசி வருகிறார். அவர் தொடர்ந்து பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசி வருகிறார். காவல்துறையினர் புகார் அளிக்கும்போது வழக்கு பதிவு செய்கிறார்கள். ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை. அவரை ஏன் கைது செய்யவில்லை. அவரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள். அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார். அதேபோன்று நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டதால் தன்னையும் சீமான் தொடர்ச்சியாக விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.