அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்ற கற்பனை உலகில் முதல்வர் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அதிமுக கூட்டணி தான் 210 இடங்களில் வெல்லப்போகிறது. எடப்பாடி பழனிச்சாமி 210 தொகுதிகளில் வெல்லப் போகிறோம் என்று கூறுகிறார்களே. இது தொடர்பாக உங்கள் பதில் என்ன என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். ஆனால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் திமுக மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி.
திமுக கட்சியில் உறுப்பினர்கள் குறைந்து விட்டதால்தான் தற்போது ஊர் ஊராக சென்று வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு என கூறிக்கொண்டு மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கைக்காக இவ்வாறு செய்கிறார்கள். இதனை யாரும் நம்பி விடாதீர்கள். தற்போது திமுகவுக்கு பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. கதவைத் தட்டி தட்டி தாயே எங்கள் கட்சியில் சேர்ந்து விடுங்கள் என கூறும் அளவுக்கு அவர்களின் நிலை இருக்கிறது. திமுக கட்சியில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் பொறுப்பேற்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல மக்களின் கதவை தட்டி மக்களை சந்தித்து கட்சியில் சேருங்கள் என்று கூறும் அளவிற்கு தாழ்ந்து விட்டார்கள். மேலும் தற்போது அவர்களின் நிலைமை இதுதான் எனக் கூறினார்.
