செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளத்திலே சென்னை மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்ற நேரத்தில்…. துயரத்திற்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில்…. இந்த அரசுக்கு…. இந்த கேடு கெட்ட அரசுக்கு ….இந்த கார் பந்தயம் தேவையா ? கார்பந்தய ரேஸ் தேவையா 242 கோடி அரசினுடைய பணத்தை செலவிட வேண்டிய அவசியமென்ன ? என்பது இந்த முதலமைச்சர் விளக்க வேண்டும். எங்களுடைய முதலமைச்சர்….. முன்னாள் முதலமைச்சர் பொதுச்செயலாளர் அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. நாங்கள் கார் ரேஸை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை…. இது பணக்கார்கள் ஆடுகின்ற விளையாட்டு. நீங்களோ, நானோ, சாதாரண யாரோ விளையாட முடியாது…. ரிக்ஷா ஓட்டிக்கிட்டு இருந்தாரு… அவரு கிரிக்கெட் பிளேயரா வந்தாரு…. அப்படி எல்லாம் கார் ரேஸில் இருக்க முடியாது. இது ஒரு கோடீஸ்வரர்கள் விளையாட்டு….. இருந்தாலும் அது விளையாட்டு. நடத்தட்டும்…
ஆனால் கார் ரேஸ் நடத்துவதற்கு என்று சென்னையில் ஒரு இடம் இருக்கிறது. சென்னையில் இருங்காட்டு கோட்டை….. சோழவரத்தில் கார் ரேஸ் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஃபார்முலா ரேஸ் 5 கட்டமாக நடக்கிறது. நாலு கட்டம் சோழவரம் இருங்காட்டு கோட்டையில் நடக்கிறது.
ஐந்தாவது கட்டத்தை சென்னையிலே… மத்தியிலே…. மருத்துவமனைக்கு அருகிலே இந்த ரேஸை நடத்த வேண்டிய….. அரசாங்க பணத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் என்ன ? யார் இதில் ஆதாயம் அடைவது ? இந்த பணம் யாருக்கு ஆதாயம் ? அரசுக்கு என்ன ஆதாயம் ? மக்களுக்கு என்ன ஆதாயம்? மக்களுக்கு என்ன நன்மை? என கேள்விகளை அடுக்கினார்.
