சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது, அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடத்தின் உள்ளே மெட்ரோ ரயில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியரான ஹிமத் சங்வான் என்பவர், சீனாவில் பயணம் செய்தபோது இந்த அற்புதக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கட்டடத்தின் உள்ளே மெட்ரோ ரயில் செல்வதை பார்த்து உற்சாகமடைந்த அவர், இதை தனது பின்தொடர்பவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று கூறி, கேமராவை திருப்பி இந்த அசாதாரண காட்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை 1.5 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாராட்டியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Himat Sangwan (@himatsangwan)

இந்த வீடியோவில், வழக்கமாக நாம் சுரங்கங்களில் மெட்ரோ ரயில்கள் செல்வதை பார்த்திருப்போம், ஆனால் குடியிருப்பு கட்டடத்தின் உள்ளேயே மெட்ரோ செல்வது உலகிலேயே தனித்துவமான ஒரு தொழில்நுட்ப சாதனையாகும்.

இதைப் பார்த்த இணையவாசிகள், “இது வேறு கிரகத்து காட்சி போல உள்ளது,” என்றும், “சீனாவுக்கு நிகர் சீனாவே,” என்றும் புகழ்ந்துள்ளனர். மற்றொரு பயனர், “இது உண்மையெனில், சீனாவை என் பயணப் பட்டியலில் சேர்க்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இந்த தொழில்நுட்ப முன்னேற்றம், உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்துவதோடு, பயண ஆர்வலர்களையும் கவர்ந்துள்ளது.