உலகின் மிகவும் விஷமிக்க பாம்புகளில் ஒன்றான கோப்ராவை ஒரு பெண் துணிச்சலுடன் பிடித்து மீட்டெடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் pooja_bangar_sarpmitra என்ற கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை 3 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாராட்டியுள்ளனர்.

ஒரு பள்ளி மைதானத்தில் பெரிய கோப்ரா படம் எடுத்து நிற்க, பயந்து விலகி நின்ற மக்கள் மத்தியில், அந்த பெண் தனது புத்திசாலித்தனத்துடன், ஒரு பிளாஸ்டிக் பெட்டியை வைத்து கோப்ராவை பிடிக்கும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja_bangar_sarpmitra (@pooja_bangar_sarpmitra)

வீடியோவில், பெண் மிகவும் எச்சரிக்கையுடன் கோப்ராவின் படத்தின் மீது பிளாஸ்டிக் பெட்டியை வைத்து, பின்னர் அதன் வாலை பிடித்து பெட்டிக்குள் தள்ளுகிறார். பின்பு, பாம்பு தாக்காமல் இருக்க மூடியை கவனமாக மூடுகிறார்.

இந்த தைரியமான செயல், பார்ப்பவர்களை திகைப்படைய செய்தது. இணையவாசிகள், “இவர் தான் உண்மையான சிங்கப் பெண்மணி,” என்றும், “இப்படிப்பட்ட துணிச்சல் இப்போது அரிது,” என்றும் புகழ்ந்தனர். சிலர் நகைச்சுவையாக, “நான் இருந்திருந்தால் கோப்ராவை பார்த்தவுடன் கிலோமீட்டர் தூரம் ஓடியிருப்பேன்,” என்று கருத்து தெரிவித்தனர்.