சமூக வலைதளங்களில் விலங்குகளும் பறவைகளும் வேடிக்கையாக செய்யும் வீடியோக்கள் எப்பொழுதும் வேகமா பரவும். இவற்றை பார்க்கும்போது சில சமயம் ஆச்சர்யமாகாக இருக்கும், சில சமயம் சிரிப்பு கண்ட்ரோல் பண்ண முடியாம போகும்.
அதேபோன்று ஒரு வீடியோ வைரலாகி, எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு புறா, போலி புறாக்களோட கூட்டத்தில் நடந்த ஸ்காமை பார்த்து, “அடேங்கப்பா!”னு ஆச்சர்யப்பட்டு, தலையை ஆட்டி சிரிச்சுடுவீங்க.
வீடியோவில் ஒரு புறா தானியம் தின்னுது, ஆனா அதுக்கு தெரியாம போலி புறாக்களோட கூட்டத்துல மாட்டிக்கிச்சு. சாலையோரமா நிறைய புறாக்கள் தானியம் தின்ன மாதிரி உட்கார்ந்திருக்கு, ஆனா எல்லாமே போலி! இதுல ஒரே ஒரு உண்மையான புறா, இந்த போலி கூட்டத்துல குழம்பி, “என்னடா இது, இவங்க யாரு?”னு திகைச்சு நிற்கிறது.
View this post on Instagram
பறவைகளை பிடிக்கறவங்க பயன்படுத்தற ஒரு தந்திரம்தான் இந்த போலி புறாக்கள். இதை பார்த்த புறா, தன் நண்பர்கள் உண்மையானவங்களா இல்லையானு புரியாம தவிக்குது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டுல பகிர்ந்திருக்காங்க. ஆயிரக்கணக்கானவங்க இதை பார்த்து, “இவங்க ஆன்லைன் ஃப்ரெண்ட்ஸ் மீட்அப் மாதிரி இருக்கு”, “பாவம், புறாவோட சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சு”, “எல்லாரும் ஏன் இப்படி சைலண்டா இருக்கீங்க?”னு கலகலப்பா கமெண்ட் பண்ணியிருக்காங்க.
