நம்ம ஊர் திருமணங்கள் வெறும் புரோகித வேலைகளோடு நிக்காமல், வண்ணமயமான கொண்டாட்டமாக மாறிடும். சங்கீதம், நடனம், சிரிப்பு, சந்தோஷம்னு எல்லாம் சேர்ந்து மணமக்களோட நாளை ஸ்பெஷலாக்கிடும். திருமணத்துல எல்லாரும் ஏதாவது ஒரு பங்கு வகிக்க, மணப்பெண்ணோட அக்கா அல்லது தங்கைகள் பெரும்பாலும் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துடுவாங்க. இப்போ அப்படி ஒரு வீடியோ வைரலாகி, மணப்பெண்ணோட தங்கை மஞ்சள் தடவும் விழாவில் செமையா டான்ஸ் ஆடி, எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியிருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ambika Vani (@ambikavaniofficial)

இந்த வீடியோ ஒரு மஞ்சள் தடவும் விழா மாதிரி தெரியுது. மணப்பெண் மஞ்சள் நிற உடையில் உட்கார்ந்து, போட்டோ எடுக்கறாங்க. அவருக்கு பக்கத்துல நிக்கிற இன்னொரு பெண், மணப்பெண்ணைப் போலவே மஞ்சள் உடையில் இருக்காங்க. இவங்க மணப்பெண்ணோட தங்கை. திடீர்னு இந்த பெண், கேமரா தன்னை நோக்கி வரவும், லேசான புன்னகையோடு ஆட ஆரம்பிக்கறாங்க.

அவங்க சின்னச் சின்ன ஆனா அழகான துள்ளல்கள், விழாவோட மூடையே மாற்றி, சந்தோஷமா ஆக்கிடுது. இந்த சின்ன வீடியோவை  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டுல பகிர்ந்திருக்காங்க. இதுவரை 23.5 மில்லியனுக்கும் மேல பேர் பார்த்து, லட்சக்கணக்கானவங்க லைக் பண்ணி, “இந்திய திருமணங்களோட மேஜிக் இதுதான்”, “இந்த டான்ஸ் வீடியோவுக்கு உயிர் கொடுத்துடுச்சு”, “செம ஜாலியா இருக்கு”னு கமெண்ட் பண்ணியிருக்காங்க.