செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடக மாநில அரசு அவர்கள் மாநிலத்துக்காக நிக்குது. நீங்க உங்க மாநில மக்களின் நலனுக்கு நீங்க நில்லுங்க… தூக்கி வீசுங்க அவனை… இவ்வளவுக்கு நான் என்ன சொல்றேன் பாருங்க…  நான் போட்டியில் இருந்து வித்ரா பண்ணிக்கிறேன்… விலகிக்கொள்கிறேன் என்கிறேன்….  கூட்டணியில் வந்து உங்க கூட சீட் எல்லாம் கேட்கல.  நான் உங்களை சப்போர்ட் பண்றேன். நான் உங்களை ஆதரிக்கிறேன்.  உங்களுக்காக வாக்கு கேட்கிறேன். ஊர் ஊரா போய் நானும் என் பிள்ளைகளும் உழைக்கிறோம். தூக்கி விடு அவன…  காங்கிரஸ்ஸை வெளியேத்தணும்.

இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்யுங்க…  பிஜேபி எதிர்த்தா என்ன ? எவன் எதிர்த்தா என்ன ? நான் வந்து உங்களை சப்போர்ட் பண்றேன். போட்டியிலிருந்து விலகிக்கிறேன். 40 தொகுதியில நான் போட்டி இல்லை. தேர்தலுக்காக நான் இப்ப வேலை செஞ்சிட்டு இருக்கேன். ஆனால் நான் விலகிக்கிறேன்…  என் பிள்ளைங்க கோச்சுக்க மாட்டாங்க…  அண்ணன் எது செஞ்சாலும்,  சரியா இருக்கும்னு என தெரிவித்தார்.