மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர் குடல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, இணையவாசிகளைப் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், மும்பையைச் சேர்ந்த ஒரு நபர், தனது பகுதியில் உடல்நலமில்லாமல் கிடந்த தெரு நாய் ஒன்றுக்குச் சிகிச்சை அளிக்கத் துடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விலங்கு மீட்புக் குழுவினருக்கோ அல்லது வாகனங்களுக்கோ காத்திருக்காமல், தன்னிடம் இருந்த ஒரே வசதியான சைக்கிளையே ஆம்புலன்ஸாக மாற்றி அந்த நாயைச் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த நாய் கீழே விழுந்துவிடாதபடி மிகவும் கவனமாக சைக்கிளில் வைத்துக்கொண்டு, பிஸியான மும்பை தெருக்களில் அவர் சென்ற விதம் பார்ப்பவர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sudhir Kudalkar (@sudhirkudalkar)

“பெரும் செல்வம் தேவையில்லை, மற்ற உயிர்கள் மீது அக்கறை கொள்ளும் மனமிருந்தால் போதும்” என்று இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். தெரு நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் குறித்த செய்திகள் அதிகம் வரும் வேளையில், பொறுப்புணர்வுடன் ஒரு ஜீவனைக் காப்பாற்றத் துடித்த இந்தச் சாதாரண மனிதரின் செயல், உண்மையான மனிதநேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.