திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, கரூரில் நடந்த சம்பவத்தை மட்டும் சொல்றேன் நான்…  என்ன நடக்குது ? காலையில சிற்றுண்டி வழங்கிய ஒரே முதலமைச்சர்…..  இந்தியாவிலேயே நம் தளபதி மு.க ஸ்டாலின் தான் காலை சிற்றுண்டி வழங்கிய முதலமைச்சர். அந்த காலை உணவை தயார் செய்த ஒரு அம்மா,  அவங்க மலை சாதியைச் சேர்ந்தவங்க.  அரவக்குறிச்சி பக்கத்துல…. கங்குவார் சத்திரம்னு  ஒரு கிராமத்துல…. 

அந்த ஊர்ல இருக்கிற உயர்ந்த ஜாதி புள்ளைங்க எல்லாம் அவங்க அப்பா,  அம்மா பேச்சை கேட்டுகிட்டு….  இந்த அம்மா சமையல் பண்ணா நாங்க சாப்பிட மாட்டோம் என்று…. ஒரு SC /ST பெண் சமைச்ச சாப்பாட்ட  சாப்பிட மாட்டோம்ன்னு காலை உணவை சாப்பிடாமல்,  ஜாதி வெறியோடு பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள் . அப்போது இருந்த  ”கலெக்டர் பிரபு சங்கர்” நேரா நம்ம  தலைவருடைய ஆணையை ஏற்று,  அந்த இடத்துக்கு போயி…   

சோத்துல என்னமா ஜாதி ? ஒரு மனுஷனுக்கு ஜாதி இல்லாத இடம் எதுனா…  நம்ம சாப்பிடுற சாப்பாடு தான். அதை யாரு சமைச்சா உனக்கு என்ன ?  ஹோட்டல்ல எவன் சமைக்கிறாங்க ? நம்ம கண்டா புடிக்கிறோம்…  எந்த ஜாதிக்காரன் ஓட்டலில் தோசை சுடுறாங்க என நமக்கு தெரியுமா ? யாரு சுட்டாலும் நம்ம சாப்பிடுறோமே…  ஆனால் காலை உணவை ஒரு தாழ்ந்த ஜாதி பெண் சமைத்தாள் என்பதற்காக சாப்பிடாம இருந்தால் எப்படின்னு…

அந்த கலெக்டர் நேரடியா அந்த இடத்துக்கு முதலமைச்சர் உடைய ஆணையை வாங்கிட்டு போயி…  இந்த ஜாதியை உங்கள் மனதிலிருந்து தூக்கி எறிங்கன்னு சொல்லி, முதல்ல அவர் ஒக்காந்து அந்த சாப்பாட்டை இலையில வாங்கி கலெக்டர் சாப்பிட்டவுடனே….  எல்லா புள்ளைங்களும்… அந்த கிராமமே உட்கார்ந்து சாப்பிட்டு….  அந்த ஜாதி வெறியை முறியடித்தது இதுதான் ”திராவிடம் மாடல்” ஆட்சியினுடைய மிகப்பெரிய சிறப்பு  என பேசினார்.