வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை மூன்று ரூபாய் உயர்ந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ 10 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. பறவை காய்ச்சல் எதிரொலியாக கடந்த சில நாட்களாக விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.