தமிழகத்தில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேசமயம் கர்ப்பிணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனுசுயா எச்சரித்துள்ளார். வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் கவனிப்பு அவசியம். ஏனெனில் வெப்பம் காரணமாக அவர்களின் ஹார்மோன் மாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் நீரிழப்பு, மயக்கம், எரிச்சல் உண்டாகலாம். எனவே உடலை கொடுமையாக வைத்திருக்க கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பருத்தியிலான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.