திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி,  உதயநிதிக்கு கட்டம் சரியில்லன்னு…. எடப்பாடி பழனிச்சாமி அவர்களே….  உங்களுக்கு தான் கட்டம் சரியில்லை. AIADMK அப்படின்றது அந்த கட்சி பெயர். அதுக்குள்ளே எங்க DMK இருக்கு பாத்திருக்கீங்களா….  AIADMK  அந்த DMK மட்டும் எடுத்துட்டா மூணு எழுத்து தான் இருக்கான். AIA அந்த மூணு எழுத்து என்ன தெரியுமா ?

அகில இந்திய அடிமைகள் அதான் AIA. DMK எடுத்துட்டா நீங்க எல்லாம் இந்தியாவினுடைய  அடிமைகள். இதில் அவருக்கு மாநாட்டில் பட்டம்  வேற…  புரட்சித்தமிழன்…  வெட்கமா இல்ல ? எங்க அண்ணன் சத்தியராஜ்க்கு கொடுத்த பட்டத்தை…. இன்னொருத்தருக்கு கொடுத்த பட்டத்தை…  வெட்கம் கெட்ட தனமாக தனது பட்டமாக மாற்றி கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி என விமர்சித்தார்.

இன்னைக்கு அவருக்கு இந்த இடத்தில் நான்  பட்டம் கொடுக்கிறேன். புரட்சித்தமிழன் அல்ல.   ”புரட்சி அடிமை” எடப்பாடி பழனிசாமி. அவருக்கு என் தம்பி உதயநிதி பற்றியும்,  எங்கள் தளபதியைப் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

  ”சனாதனம்” இதை முறியடித்த பெருமை என் தம்பி உதயநிதி ஸ்டாலினை தான் சாரும். அவருடைய கருத்தை பார்த்து எல்லோரும் இன்று தொடை நடுங்கி போய் இருக்கிறார்கள். ”சனாதனம்”ங்குற  வார்த்தைக்கு என்ன அர்த்தம் ? உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அப்படின்னு சொல்றதுதான் ”திராவிடம்” .ஆனால் உயர்ந்தவர்கள்,  தாழ்ந்தவர்கள் என்பதை அப்படியே நிலைநாட்டிக் கொண்டிருப்பது தான் ”சனாதனம்” எனத் தெரிவித்தார்.