தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கும் நிலையில், நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், நடிகைகள் திஷா பதானி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் அறிவியல் கதையம்சத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்துள்ளனர். அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி கல்கி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்த அஸ்வத்தாமன் கதாபாத்திரம் குறித்த வீடியோ வெளியானது. மேலும் ரசிகர்களிடையே கல்கி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.