’பிக் பாஸ்’ ஏழாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார் நடிகை ரவீனா. நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ’ராட்சசன்’, ‘எனிமி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்ட அவரிடம் ’எந்த நடிகரோடு கதாநாயகியாக நடிக்க ஆசை?’ எனக் கேட்டிருந்தார்கள்.

அதற்கு நான் விஜய் சாரோடு நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அது இனிமேல் நடக்குமா எனத் தெரியவில்லை. அவருடன் இல்லை என்றாலும் அவருடைய மகனுடனாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். மற்றபடி அவர் இயக்கம் படத்தில் நாயகியாக நடிக்க ஆசை என நான் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.