உருவத்தைப் பார்த்து எடை போடாதே என்பதற்கு உதாரணமாக, நீர்யானை செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் இப்போது செம வைரல்.

சமூக வலைதளங்களில் வெளியாகும் வனவிலங்கு வீடியோக்கள் எப்போதுமே த்ரில்லிங்காக இருக்கும். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சகதி நிறைந்த தண்ணீரில் நீர்யானை ஒன்று அசைவற்றுப் படுத்துக் கிடக்கிறது.

இதைப் பார்த்த ஒரு கழுதைப்புலி, அந்த நீர்யானை இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்து, அதை வேட்டையாடும் நோக்கில் அருகில் செல்கிறது.

நீர்யானையை முகர்ந்து பார்த்த கழுதைப்புலி, அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் நீர்யானை மின்னல் வேகத்தில் விழித்துக்கொண்டது. சற்றும் எதிர்பாராத விதமாகத் தனது பிரம்மாண்டமான தாடையைத் திறந்து கழுதைப்புலியை ஒரே முட்டு முட்டியது நீர்யானை.

நீர்யானையின் அசுர பலத்தைப் பார்த்து மிரண்டு போன கழுதைப்புலி, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியது.

45 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். நீர்யானை அமைதியாகத் தெரிந்தாலும், அது காட்டின் மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்று என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.