சனவரி 4  கிரிகோரியன் ஆண்டின் நான்காம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார்.

1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.

1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.

1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.

1649 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.

1717 – நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் உத்ரெக்ட் உடன்பாட்டைத் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.

1762 – எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.

1798 – உதுமானியர்களினால் வலாச்சியாவின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்ட கான்சுடன்டைன் அங்கெர்லி புக்கரெஸ்ட் வந்து சேர்ந்தார்.

1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விற்றார்.

1854 – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

1878 – சோஃபியா நகரம் உதுமானியரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 1879 இல் விடுதலை பெற்ற பல்காரியாவின் தலைநகரானது.

1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1]

1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1912 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் சாரணர் இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1918 – பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.

1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.

1951 – கொரியப் போர்: சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.

1958 – 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.

1958 – முதலாவது செயற்கைக் கோள் இசுப்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

1959 – சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.

1966 – பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1976 – வட அயர்லாந்தில் ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1987 – அமெரிக்காவில் பாஸ்டன் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

1989 – லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1990 – பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.

1998 – அல்சீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – இசுப்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

2010 – உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

2018 – தென்னாப்பிரிக்காவில் பயணிகள் தொடருந்து ஒன்று பாரவுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1643 – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/27)

1785 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர், மொழியியலாளர் (இ. 1863)

1809 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1852)

1813 – ஐசக் பிட்மன், ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1897)

1889 – பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (இ. 1963)

1892 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியலாளர் (இ. 1960)

1904 – எஸ். எஸ். வாசன், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 1969)

1940 – பிறையன் ஜோசப்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்

1941 – க. துரைரத்தினசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2021)

1944 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர், ஓவியர் (இ. 2020)

1954 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (இ. 2018)

1963 – மே-பிரிட் மோசர், நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்

1964 – பிரபா கணேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்

1904 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (பி. 1857)

1908 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்க வானியலாளர் (பி. 1834)

1929 – சேசாத்திரி சுவாமிகள், தமிழக சித்தர் (பி. 1870)

1941 – என்றி பெர்குசன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1859)

1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

1961 – எர்வின் சுரோடிங்கர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர் (பி. 1887)

1965 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (பி. 1888)

1974 – அண்ணல் தங்கோ, தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1904)

1974 – ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)

1976 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1895)

1994 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழகத் தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1913)

1994 – ஆர். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1939)

2004 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1917)

2005 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கை சட்டத்தரணி, தமிழ் ஆர்வலர், தொழிற்சங்கவாதி (பி. 1920)

2010 – சுடோமு யாமகுச்சி, சப்பானியப் பொறியியலாளர் (பி. 1916)

2017 – அப்துல் ஹலீம் ஜாபர் கான், இந்திய சித்தார் கலைஞர் (பி. 1927)

இன்றைய தின சிறப்பு நாட்கள்

தியாகிகள் நாள் (காங்கோ சனநாயகக் குடியரசு)

விடுதலை நாள் (மியான்மர், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)

குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாள் (அங்கோலா)

உலக பிரெயில் நாள்