இன்றைக்கு நகர்ப்புறம் மட்டுமன்றி கிராமப்புறங்களில் ரெடிமேட் தோசை மாவு வாங்கி பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ரெடிமேட் மாவில் உள்ள ஆபத்துக்களை தெரிந்து கொண்டால் இனிமேல் நீங்களே உங்கள் வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்து பயன்படுத்தும் முடிவுக்கு வந்து விடுவீர்கள். உடனடியாக கிடைக்கும் மாவு நமது உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி தீங்கு விளைவிக்கின்றது என்பதை காணலாம். நமது வீட்டு கிரைண்டர் அல்லது மாவாட்டும் கல்லில் மாவு அரைத்ததும் சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி கழுவி விடுவோம்.

மீண்டும் பயன்படுத்தும் போது நல்ல தண்ணீரை கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்தப்பின்னரே மாவு அரைப்போம். ஆனால் வணிக நோக்கில் மாவு அரைக்கும் அனைவரும் அவ்வாறு சுத்தம் செய்து அரைப்பார்களா என்பது கேள்விக்குறியே. நன்றாக சுத்தம் செய்யாமலும் நன்றாக உலராமலும் மீண்டும் மாவு அரைக்க தொடங்கும்போது அதில் பாக்டீரியா தாக்கம் அதிக அளவு ஏற்படும். ஈக்கொல்லி பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள மாவை பயன்படுத்தினால் வயிற்று வலி, வாந்தி, உடல் வரட்சி, மயக்கம், தலைச்சுற்றல், இறப்பை நோய் போன்ற உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வேக வைத்தாலும் அழியாதவை இந்த ஈக்கொல்லி பாக்டீரியாக்கள். இதேபோல் ரெடிமேட் பாக்கெட் மாவுகளை பயன்படுத்துவதிலும் பேராபத்து உள்ளது. பாக்கெட் மாவு சீக்கிரம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக மாவுடன் கால்சியம் சிலிகேட் என்கிற கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த கால்சியம் சிலிகேட் செரிமான மண்டலத்தில் கோளாறு ஏற்படுத்திவிடும். வயிற்று வலி வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும். பணத்தை கொடுத்து நோயை வாங்காதீர்கள். அவரது வீட்டிலேயே மாவு அரைத்து பயன்படுத்துங்கள்.