
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உச்சநீதிமன்றம் தெளிவா சொல்லி இருக்காங்க… வயர்நீதிமன்றம் ரிவ்வியூசெய்த முறை சரி என்று சொன்ன பிறகு அடுத்து வரக்கூடிய ஜட்ஜ்மென்ட்டும் இதே போல வரும் என்று ஒரு சாமானிய மனிதனாக இருக்கக்கூடிய எனக்கு நம்பிக்கை.
அதனால் இது திமுக என்கின்ற கட்சி….. குறிப்பாக அவுங்களுடைய சிஸ்டம் பொலிடிகல் டெக்னாலஜி…. எப்படி அவங்க அரசியல் செய்கிறார்கள் ? பணம் சார்ந்த அரசியல் செய்கிறார்கள்…. அனைத்தையுமே தலைகீழாக புரட்டி போடக்கூடிய ஒரு தீர்ப்பாக நான் பார்க்கின்றேன். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைக்கும், பாஜகவினர் மீது எடுக்கும் நடவடிக்கைக்கும் ஒரு பாரபட்சம் இருக்கு என சொல்வது ரொம்ப தவறான விமர்சனம்.
தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் அருமையான வாக்கியம் சொன்னார்… இந்த வழக்கு அவருடைய அமர்வுக்கு போகும் போது…. ரிவ்யூ போகும்போது, கடவுளுக்கு நன்றி…. தமிழ்நாட்டினுடைய உயர்நீதிமன்றத்தில் இது போன்ற நீதிபதிகள் இருக்கின்றார்கள். அந்த அளவுக்கு இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு வழக்கு….. எந்த அளவுக்கு கிழமை நீதிமன்ற தீர்ப்பில் தலையீட்டார்கள் என புரிஞ்சு கொள்ள வேண்டும்.
இந்த கேஸை பொருத்தவரை… ஒரு மாவட்டத்தின் கீழமை நீதிமன்றத்தில் இருந்து…. இன்னொரு கிழமை நீதிமன்றத்திற்கு மாற்றுகிறார்கள். ஒரு வழக்கில் கீழமை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட்டுள்ளார்கள். அதை நாம் பார்க்கிறோம். இது DVACல முன்னாள் அதிமுக ஆட்சி காலத்தில் வந்த வழக்கு. எதற்காக இந்த பாயிண்டை நான் வைக்கிறேன் என்றால்,
இது புதுசு கிடையாது. இது தொடர்ந்து நடக்கக்கூடிய சிஸ்டமிக் ப்ராப்ளம் என நான் சொல்றேன். உச்ச நீதிமன்றத்தில்…. உயர் நீதிமன்றத்தில்…. சொல்லக்கூடிய வழக்குகள் இப்ப நடக்கிறது. பொன்முடி அவர்கள் மீது ED கேஸ் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கு. ஏன்னா பல இடத்துல சொல்லிட்டு இருக்கேன். துபாய்ல ஒரு நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு 47 லட்சத்துக்கு வாங்கி, இன்னைக்கு அதே நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.