வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை,  இதை அரசியல் ரீதியாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால்…..  குஜராத்தில்…. உத்தரபிரதேசத்தில்…. சண்டிகார்ல…… பாஜக ஆளும் மாநிலத்தில மாசத்துக்கு ஒருத்தர்….

சொத்து குவிப்பு வழக்காக இருக்கட்டும், வேற கிரிமினல் வழக்கு ஆகட்டும் மாசத்துக்கு ஒருத்தர் சிறைக்கு  போய்கிட்டு இருக்காங்க. அதுக்காக அந்த கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பு… கூட்டணியை பாதிக்கும் என சொல்ல முடியுமா ? அப்படி கிடையாது. என்னோட வருத்தங்கள் எல்லாம்…. ஒரு சிட்டிசன் ஆஃப் த கண்ட்ரி நான் சொல்றேன்….. இது 2021இல் இவங்க ஆட்சிக்கு வந்தாங்க…. 2022, 2023 இந்த மூன்று ஆண்டுகளாக…

ஊழல் தடுப்பு காவல் துறை யார்கிட்ட இருக்கு. முதலமைச்சர் கிட்ட இருக்கு. ஒருவேளை முதலமைச்சர் இதை தவறாக செய்ய வேண்டும்….  இதை ஏதாவது காப்பாத்தணும்னு நினைச்சாருன்னா…. லஞ்ச ஒழிப்புத்துறை வித்ட்ராவே பண்ணி இருப்பாங்க….  வாபஸ் வாங்கி இருப்பாங்க….  அந்த அளவுக்கு கடந்த காலங்கள் எல்லாம் நடந்திருக்கு…  நிறைய வழக்குகள் முன் உதாரணம் சொல்ல முடியும் என தெரிவித்தார்.