வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன்,  இந்த வழக்கு தொடர்பாக பேசிய அனைவரும் ஒரு கருத்தை முன் வைக்கிறாங்க. இது மிக மிக தவறான கருத்து. நம்முடைய நீதிமன்றங்களை இழிவுபடுத்தும் கருத்து.  அது யாராக இருந்தாலும் சரி….  அவர் முன்னாள் நீதிபதியாக இருந்தாலும் சரி……

அரசியல் கட்சியினுடைய தலைவராக இருந்தாலும் சரி…. கீழமை நீதிமன்றங்களை இழிவு படுத்துவதை இவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக யார் வராங்க அப்படின்னா….. எழுத்து தேர்வு வச்சு,  இன்டர்வியூ வச்சி அவங்க தான் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுபோல ஒரு தேர்வு முறை எந்த ஜூடிசியல் ப்ராசஸுக்கும் கிடையாது. அப்படிப்பட்டவர்களை நீங்க இழிவு படுத்துவதை நிறுத்த வேண்டும்.

அதிலும் முன்னாள் நீதிபதிகள் வந்து அப்படிப்பட்டவர்களை  இழிவுபடுத்துவது மிக மிக வருத்தமாக இருக்கிறது. நான் ஒரு வழக்கறிஞர்…… உயர்நீதிமன்றம் இவர்களுக்கு சாதகமாக…..  இவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பை கொடுத்த உடனே…..  அந்த நீதிபதி சூப்பராகிடுறாரு.. நீதிமன்றம் இவர்களுக்கு பிடிக்காத தீர்ப்பை வழங்கப்பட்ட உடன் அந்த நீதிபதி அரசியல் தலையீட்டுக்குட்பட்ட நீதிபதியாகி விடுகின்றார்.

அண்ணாமலை என்ன சொல்கிறார் ? கீழமை நீதிமன்றங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என சொல்கிறார்கள். அப்படி கட்டுப்படிதான் அமித் ஷா அவர்களுக்கு விடுதலை வாங்கினார்களா? நீதிபதி லோயா இறந்து போனாரே…  சந்தேகத்துக்கு இடமாக நீதிபதி லோயா  இறந்து போனாரே….  அதை விசாரிப்பதற்கு தைரியம் பாஜகவுக்கு இருக்கிறதா ?

ஒரு ஏஜென்சி போட்டு நீதிபதி லோயா மரணத்திற்கு நீதி கொடுப்பார்களா ? அரசியலில் ஒரு ஜட்ஜ்மெண்ட் வந்துச்சுன்னா….. உடனே நீங்க சொல்வதெல்லாம் சரியாகிடுமா ? ஒரு அருமையான கேள்வி கேட்டீங்க….  பாஜக உடைய தலைவர் பார்த்து….  உங்க கட்சியில் சேர்ந்தால் EDயிலிருந்து விசாரிக்க மாட்டாங்க என சொல்கிறார்கள்  என்று கேட்டீர்கள்….  அதற்கு ஏதாவது பதில் சொன்னாரா ? நழுவி தானே போனாரு என தெரிவித்தார்.