திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலங்கியம் பகுதியில் சித்தார்த் என்ற ஒரு 13 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில் தினசரி ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நீண்ட நேரமாக செல்போன் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளான்.

குறிப்பாக செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக சிறுவன் வைத்திருந்ததால் சிறுவனை அவரது பெற்றோர் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என கண்டித்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் நேற்றும் வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் செல்போனில் கேம் விளையாடினான்.

இதனால் பெற்றோர் நீண்ட நேரம் செல்போன் பார்க்கக்கூடாது என கண்டித்துள்ளனர். உடனே கோபமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டான். இதில் சிறுவன் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.