கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில் சந்தித்து….  தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்கு தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட கோரிக்கை மனுவை அளித்துள்ளேன்.

தென் மாவட்டத்திற்கு மட்டும் 2000 கோடி ரூபாயை முதற்கட்டமாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.  தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுடன் வீடியோ கால் மூலமாக…. முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும்,  வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தேன்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர்களோடு இங்கிருந்து பணியாற்றி வரும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக தகவல்களை கேட்டறிந்தேன். நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும்,  மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

சென்றடைய முடியாத நிலையில் இருக்கக்கூடிய கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களின் நிலை பற்றியும்,  அவர்களை மீட்கக்கூடிய அவசர பணி குறித்தும் , என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறித்தும்  கேட்டறிந்தும், அந்த பகுதிகளை விரிவுபடுத்தவும் கேட்டுக்கொண்டேன்.  தண்ணீர் சூழ்ந்துள்ள கிராம மக்களுக்கு உணவு வழங்க மற்றும் மீட்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மீட்பு  பணிகளில் ஈடுபட்டுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் கேட்டுக்கொண்டேன் என தெரிவித்தார்.